Search This Blog
Thursday, January 27, 2011
Tuesday, January 25, 2011
Tuesday, January 18, 2011
Friday, January 7, 2011
காரல் மார்க்ஸின் வாழ்கை வரலாறு
காரல் மார்க்ஸின் வாழ்கை வரலாறு
தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.
தாய்: ஹென்ரிட்டா.
பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி - 664 இலக்கமிட்ட வீடு.
மதம்: யூத மதம்.
சொந்த நாடு: பிரெஞ்சு.
பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.
உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.
தந்தையை பற்றி: சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்.
பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.
பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.
கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)
கல்லூரி வாழ்க்கை: பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.
கல்லூரி இறுதி வாழ்க்கை: தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.
காதல் வாழ்க்கை:
காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.
காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக...
காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.
ஜென்னியின் தோற்றம்: ரைன் லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.
காதல் உருவாக்கம்: ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.
ஜென்னி இரசித்த ஆணின் அழகு: அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!!!
மார்க்ஸின் கூற்று: ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.
இரண்டாவது கல்லூரி வாழ்க்கை:
ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது.
ஜென்னியின் காதல்:
“என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல” மற்றும் “நீ அவனை மறந்து விடு” போன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள் “இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி... ஜென்னி என்றால் காதல்....”
தொழில்:
பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.
திருமண வாழ்க்கை:
ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.
1. உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.
2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.
தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை... அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை... மன்னிப்பு”!!!
நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.
கம்யுனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.
இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.
இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,
“எல்லா நாடும் என் நாடே!
எல்லா மக்களும் என் மக்கள்!!
நானோர் உலக மகன்!!!”
சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி... ஓரே ஒரு அடி... “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.
இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.
இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.
தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.
இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.
உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.
மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.
இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.
பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.
பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.
மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.
மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.
“யூதனாகப் பிறந்தார்!
கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!
மனிதனாக இறந்தார்!!!
காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்................”.

நன்றி
கீற்று
Sunday, January 2, 2011
பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை

ஞாநி
மஞ்சுளா நவநீதனின் கட்டுரை பல முக்கியமான கேள்விகளை தீவிரமாக எழுப்பும் அதே சமயத்தில் ஆங்காங்கே மேம்போக்கான, அரை வேக்காட்டுத் தனமான குறிப்புகளையும் சொல்லிச் செல்கிரது. இதுவரை இணையத்தில் ( திண்ணையில் மட்டும் அல்ல) நான் வாசிக்கக்கிடைத்த பலவற்றில் இந்தப் போக்கு தென்படுகிறது. அதாவது ஒரு புறம் சீரியசானவற்றைப் பேசிக் கொண்டே, அதற்கு முரணானflippant உதிர்ப்புகளும் கலந்து வருகின்றன.
நந்தன்வழிக்கு நான் எழுதிய கடிதத்தை முதல் முறை வாசிக்கிறபோதே மஞ்சுளா சொல்லும் பலவற்றுக்கு என் கடிதத்தில் இடமே இல்லை என்பது தெரிந்துவிடும். அருணாசலம் தமிழ், சாதிய ஒழிப்பு, ஈழத்தமிழர், பெரியார், பற்றியெல்லாம் பேசத்தொடங்குவதற்கு முன்பிலிருந்தே அவற்றில் நான் அக்கறை காட்டி வந்திருக்கிரேன் என்பதை என் கடிதம் குறித்தது. அதற்கு மஞ்சுளா விசித்திரமாக ஒரு விமர்சனம் வைக்கிறார். அருணாசலத்துக்கு என் போல வெகுஜன சாதனப் பயிற்சி கிடைக்காதிருந்திருக்கலாம்; அவர் பெரியாரைப் பயில நேரம் எடுத்திருக்கலாம் என்பதாக. அருணாசலம் வயதில் என்னை விட மூத்தவர். தமிழக அரசில் வருவாய்த் துறையில் பணியாற்றி, தாசில்தார் பதவி வரை வகித்தவர். விருப்ப ஓய்வு பெற்று நகலகத்தொழிலில் ஈடுபட்டவர். என்னை விட எல்லா வசதிகளும் அதிகம் வாய்க்கப் பெற்றவர்.இதெல்லாம் தமிழகச் சூழலில் என்னையோ, நந்தன் இதழையோ தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரிந்த பின்னணிகள். மஞ்சுளா எங்கு வாழ்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ( இணைய உலகில் ஒருவரின் வாழ்விடம் கூடத்தெரிய முடியாதிருப்பது சில தருணங்களில் வசதியாகவும் பல தருணங்களில் சிக்கலாகவும் உள்ளது.)
நான் என்னை பெரியார் சீடன் என்று சொல்லிக் கொள்ளவே இல்லை; காட்டிக் கொள்ளவும் இல்லை. ஆனால் மஞ்சுளா அதை என் மீது ஏற்றி வைத்துவிட்டு, அதன் அடிப்படையில் தொடர்ந்து எழுதிக் கொண்டே போகிறார். நான் யாருக்கும் சீடனாக இருப்பதை எப்போதும் ஏற்றுக் கொண்டது இல்லை. காந்தி, பெரியார், பாரதி, கார்ல் மார்க்ஸ், திரு.வி.க, வள்ளலார், ஜோதிபாய் பூலே, ரஸ்ஸல், என்று நான் பல அறிஞர்கள், சிந்தனையாளர்கள், சமூக அக்கறையாளர்களிடமிருந்து பல கருத்துக்களை கற்றுக் கொள்கிறேன். ஏற்றுக் கொள்கிறேன். அவர்களிடம் முரண்படும் சமயங்களும் உண்டு. எனினும் மேற் குறிப்பிட்ட வர்களிடமிருந்து என்னை வளப்படுத்தக் கிடைத்த விஷயங்களே அதிகம்.குரு சீடன் மனோபாவத்தை நான் எப்போதும் நிராகரிக்கிறேன். உலகறிந்தவர்கள் முதல், உலகறியாத சாதாரண மனிதர்கள் வரை பலரிடமிருந்தும் நாம் எப்போதும் அறியவும், கற்கவும், நம் கருத்துக்களை உறுதிப் படுத்திக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் விஷயங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன என்பதே என் அனுபவம்; அதுவே என் பார்வை. பெரியார் பற்றுப் பேச எனக்கு உரிமை கிடையாது என்று அருணாசலம் எழுதியபோது, எனக்கு நிச்சயம் உரிமை உண்டு, அவரை விடவும் உரிமை உண்டு என்று வலியுறுத்தியதே என் கடித வாசகம். அது சிஷ்ய மனோபாவம் அல்ல.
பிராமணப் பெண்ணை மனைவியாகக் கொண்ட சூத்திரரைப் பாராட்டுவது சரி யா தவறா, கண்டிப்பது சரியா தவறா என்று என் கடிதத்தில் இல்லவே இல்லாத ஒரு விஷயத்தை முன்வைத்துக் குழப்புகிறார் மஞ்சுளா. 'பார்ப்பனப் பெண்ணை இரண்டாவது தாரமாக்கிக் கொண்டு,சங்கர மடத்தலைவரை வீட்டுக்கு வரவழைத்து பாத பூஜை செய்த ஓட்டல் அதிபரின் பல-தார, பலகாரச் சுவையைப் போற்றியது உங்கள் இதழ். ' என்று நான் நந்தன் வழியைக் கண்டித்திருக்கிறேன். சரவண பவன் ஓட்டல் அதிபரின் பெண்ணாசை அராஜகங்களைக் கண்டுகொள்லாமல் அவர் சூத்திரர் என்ற ஒரே காரணத்துக்காக்க நந்தன் ஆதரித்து எழுதியது. அந்த சூத்திரனோ, நந்தன் வழி எதிர்க்கிற சங்கராச்சாரியை வீட்டுக்கு வரவழைத்து தன் இரண்டாவது 'மனைவி 'யான பார்ப்பனப் பெண் சகிதம் பூஜை செய்தவன் என்பதை நான் சுட்டிக் காட்டுகிறேன். அவ்வளவுதான். பார்ப்பனப் பெண்னை சூத்திர ஆணோ, பறைப் பெண்ணை பார்ப்பனனோ திரும்ணம் செய்வதை நான் நிச்சயம் பாராட்டுகிறேன். கலப்பு மணம் ஒன்றுதான் இறுதியில் சாதியை ஒழிக்கும் வல்லமை உடையது. அதற்காக, பல தார அராஜகங்களை ஆதரிக்க முடியாது.
பெரியாரை ஏற்பது பிராமணர்களுக்குத் தற்கொலையாகும் என்று சொல்லி, எனவே பிராமணனாக என்னைக் கருதும் மஞ்சுளா நான் எப்படி அப்படிச் செய்யலாம் என்றும் கேட்கிறார். தினசரி கண்ணாடியில் பிராமணனான என்னை நானே பெரியார் சொன்னபடி செருப்பலாடித்துக் கொள்கிறேனா என்று அசட்டுத்தனமாகக் கேட்கிறார். அந்தக் கேள்வியெல்லாம் தன்னை பிராமணனாகக் கருதுகிறவருக்குத்தானே. நான் என்னை அப்படிக் கருதாதபோது எதற்காக இந்த அசட்டுக் கேள்வி ? அருணாசலம் போலவே மஞ்சுளாவும் நான் என்னை பிராமணனாகத்தான் கருதிக் கொள்ள வேண்டும் என்கிறார் போலும். நான் நந்தன்வழிக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதைப் போல 'நாங்கள் பிறந்த சாதியின் கோளாறுகளையும், மொத்தமான சாதி அமைப்பின் கொடூரத்தையும் உணர்ந்து அதற்குக் காரணமான மதத்தையும் சேர்த்து நிராகரித்தவர்கள் '. பிராமணனாகப் பிறந்ததற்காக எனக்கு எந்தக் குற்ற மனப்பான்மையும் இல்லை. நான் பொறுப்பாக்காத, நான் தீர்மானித்துச் செய்யாத எந்த செயலுக்காகவும் நான் குற்ற மனப்பான்மை ஏன் கொள்ள வேண்டும் ? மாறாக, என் மீது சுமத்தப்படும், சாதி, மத அடையாளங்களை நான் அறிவுப்பூர்வமாக தூக்கி எறிந்துவிட்டது பற்றி எனக்குப் பெருமிதமும் மகிழ்ச்சியும் மட்டுமே உண்டு.
அதெப்படி நீ மதத்தையும் சாதியையும் நிராகரிக்கலாம் ? நாங்கள் மறுபடியும் மறுபடியும் உன்னை அதற்குள் வைத்துத்தான் அடைப்போம் என்று மஞ்சுளாக்களும் அருணாசலங்களும் முயற்சித்தால், அது நடக்காது. நாங்கள் மனிதன் என்ற ஒற்றைப் பெரும் அடையாளத்தையும், தமிழன் என்ற மொழிசார்ந்த சிறு அடையாளத்தையும் தவிர வேறு எதற்குள்ளும் அடைபடமாட்டோம் என்ற உறுதி பெற்றுப் பல காலம் ஆயிற்று.
பரமசிவன், அருணாசலம், ஞாநி என்ற பெயர்கள் இந்துப் பெயர்கள் என்று வேறு ஒரு உளறல். ஞாநி எப்படி இந்துப் பெயராகும் ? ஞாநியின் இன்னொருபெயரான சங்கரன் வேண்டுமானால் சைவப் பெயரென்று சொல்லலாம்.( இந்து என்று வரலாற்றில் யாரும் கிடையாது; அது அண்மைக்கால உருவாக்கம் மட்டுமே). நாத்திகரான, இங்கர்சாலும், ரஸ்ஸலும், ஏன் கிறித்துவப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்பது போன்ற அபத்தம் இது. எப்படியானாலும், என் அதிகாரப்பூர்வமான சட்டப்படியான பெயரான ஞாநி எந்த மதப் பெயரும் அல்ல.
எந்தப் பெரியார் நமக்கு இன்று தேவை என்று கேட்கிறார் மஞ்சுளா.நான் பார்க்கிற பெரியார் சாதி ஒழிப்புக்காக, மூட நம்பிக்கைகளை பரப்பும் மத ஒழிப்புக்காக, பெண் விடுதலை சமத்துவத்துக்காகப் பாடுபட்டவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பார்வையில் இதற்குதேவைப்பட்ட பல வகை ஆயுதங்களைப் பயன்படுத்திப் போராடியவர். காலத்துக்கேற்ப ஆயுதங்கள் மாறலாம். அவர் இன்றைக்கும், இந்த லட்சியங்கள் நிறைவேறும் காலம் வரைக்கும் நிச்சயம் நமக்குத் தேவையானவர். அவரால், தலித், பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஒற்றுமையை அவர் காலத்தில் செய்ய முடியவில்லை என்பதற்காக அவர் செய்தவையெல்லாம் அர்த்தமற்றவை ஆகிவிடாது. தான் தீவிரமாக சாதி ஆதிக்க எதிர்ப்புப் பணியாற்றிய சுமார் 50 வருடங்களுக்குள்ளேயே, மேல் சாதியினரின் ஆதிக்கத்தை அரசுத்துறையில், கல்வித்துறையில் அவரால் தகர்க்க முடிந்தது என்ற ஒற்றை சாதனையே பெரியதுதான்.சாதி, மத, வர்க்க, பாலின வேறு பாடற்ற சமூகம் அமைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று இன்று நாம் யோசித்தாக வேண்டும் என்ர நிலை இருக்கிறதென்றால், அந்த நிலை வருவதற்கு உழைத்த முன்னோடிகளில் அவர் முக்கியமானவர். என் பார்வையில், பெரியார் ஏதாவது ஒரு பெரிய அரசியல் தவறு செய்தார் என்றால் அது ஒன்றே ஒன்றுதான். தேர்தலில் பங்கேற்று அரசு அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்று அண்ணா தலைமையினாவர்கள் விரும்பியபோது அதை ஏற்று பெரியாரே நேரடியாக அரசு அதிகாரத்துக்கு வந்திருக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதி அவருக்கு இருந்தது. சுமார் பத்து ஆண்டுகள் வணிக நிர்வாகியாகவும், இன்னொரு பத்துப் பதினைந்து ஆண்டுகள் நகராட்சி, பொது அமைப்புகளில் நிர்வாகியாகவும் இருந்த அனுபவம் அவருக்கு இருந்தது. அண்ணாவுக்கோ, கலைஞர் வகையறாக்களுக்கோ அன்று இதெல்லாம் துளியும் கிடையாது. ஆட்சி, அதிகார அனுபவம் மட்டுமன்றி அவற்றில் நேர்மையாகவும் ஒழுக்கத்தோடும், ஒவ்வொரு காசுக்கும் முறையான கணக்கு வைத்தும் பழகியவர் பெரியார். அவரே அரசுப் பொறுப்புக்கு வந்திருந்தால், திராவிடக் கட்சிகளில் இந்த அளவுக்கு ஊழலும் லஞ்சமும் வந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது.
பெரியாரை வெறுமே பிராமண துவேஷியாக சித்திரித்துக் கொண்டிருப்பது, அவருடைய உண்மையான நோக்கங்களை மறைக்கவும் திரிக்கவும் , அவற்றின் பக்கம் கவனம் செல்லாமல் தடுக்கவும் நடக்கும் சதியே ஆகும். அந்த சதியின் இன்னொரு வெளிப்பாடுதான் ஹிட்லர் - யூதர் போல பெரியார்- பிராமணர் என்று போகிற போக்கில் எழுதிவிட்டுப் போகிற விஷமமுமாகும்.
பாம்பு-பார்ப்பான் பேச்சு பெரியாருடையதே அல்ல. அவர் பெயரில் இது நீண்ட காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.பல பெரியார் இயக்கத்தினர், பெரியாரியல் ஆய்வாளர்கள், பெரியார் அப்படி எந்த சந்தர்ப்பத்திலும் சொன்னதாகத் தெரியவில்லை என்று பல முறை தெரிவித்திருக்கிரார்கள். ஆனால் அது வேண்டுமென்றே தொடர்ந்து பெரியாரை, ஒரு சிந்தனையாளராகக் காணவிடாமல் வெற்று முரடனாகக் காட்டுவத்ற்காக தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. பெரியார் அத்தகைய கருத்து உடையவராக இருந்திருந்தால், அவர் காலத்தில் அரசியலில் பிராமணப் பாம்பு என்று கருதக்கூடிய ராஜாஜியை ஒண்டிக்கு ஒண்டி கொல்லலவருக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. பெரியார் அற நெறிகளில் மனித ஒழுக்கத்தில் சமத்துவத்தில் நம்பிக்கையுடையவர். அவற்றை கடவுள்,மதம், சாதியிலிருந்து பிரித்தவர். ஒருவன் அற நெறியாளன் என்பதற்காக தன் கருத்தை உரத்து ஓங்கிச் சொல்லாத சாதுவாக இருக்க வேண்டியதில்லை. உரத்துச் சொல்பவன் என்பதற்காக ஒருவனை அற நெறியற்ற முரடன் என்று தவறுதலாகப்புரிந்துகொள்ளவும் தேவையில்லை.
மஞ்சுளா நவநீதன் ஆணோ, பெண்ணோ எனக்குத் தெரியவில்லை. பெண்ணாக இருந்தால், பெயருடன் ஆணைச் சேர்த்துக் கொள்ளும் அடிமைப் பார்வையை விட்டு விடட்டும். ஆணாக இருந்தால் பெண் பெயரில் இருக்கத் தேவையில்லை. எதுவாயிருந்தாலும், தான் எழுதும் விஷயங்களைப் பற்றிய மிக மிக அடிப்படையானவற்றையேனும் கற்றுத் தெளிந்தபின் எழுதத்தொடங்குவது நல்லது. பெரியார் பிறப்பால் கன்னடர் என்பது கூட தெரியாமல், அவரை தெலுங்கர் என்று ஒரு பத்தி முழுவதும் எழுதும் நபர் பெரியாரைப் பற்றி மட்டுமல்ல, எதைப் பற்றி எழுதினாலும் எப்படி அது சரிதான் என்று இனி நம்ப முடியும் ? குறைந்தபட்சம் இப்படி ஒவ்வொரு முறை தவறு செய்தாலும், அது தவறு என்று ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு, சுய விமர்சனம் செய்துகொண்டு, தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்தால், மகிழ்ச்சியடையலாம்.
ஞாநி
எம் .ஜீ .ஆர் நகர் கூட்டம் சீமான்
எம் .ஜீ .ஆர் நகர் கூட்டம் சீமான்
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, செல்வபாரதி, கோட்டை குமார் , இயக்குநர் வேலு...
Subscribe to:
Posts (Atom)