Search This Blog

Saturday, January 18, 2014

“மனுசங்கடா,நாங்க மனுசங்கடா, உன்னைப்போல என்னைப்போல எட்டுஜானு உசரமுள்ள மனுசங்கடா” - “நாங்க எரியும் போது எவன் மசுரு புடுங்க போனிங்க” என்று ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் தேசிய கீதம் பாடலை எழுதிய அய்யா இன்குலாப் அவர்களின் நேர்காணல் நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாவலர் இன்குலாப் அவர்களின் நேர்காணல் நூலை தோழர் இசாக் மிக சிறப்பாக தமிழ் அலை சார்பாக தொகுத்துள்ளார்.
இன்குலாப் அவர்கள் சிறு வயதிலிருந்து இன்று வரை தான் கொண்ட கொள்கை மாறாமல் வஞ்சிக்கப்படுகிற ஒடுக்கப்படுகிற மக்களின் பக்கம் நின்று போராடி வருகிறார்.தலித் இஸ்லாமியர் உரிமைகள்,திராவிட கொள்கைகள்,சாதி மத வெறி, மார்க்சிய கொள்கைகள் போன்றவற்றை மிக அழமாக பேசியும் எழுதியும் உள்ளார்.
“மானுடக் குரல் இன்குலாப் நேர்காணல்கள்” நூல் வெளியீட்டு விழா 12.01.14 அன்று சென்னை பெனின்சுலா ஹோட்டலில் நடைபெற்றது. தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் தலைமையில்
தோழர் தொல்,திருமாவளவன் அவர்கள் வெளியிட
பேராசிரியர் பிரபா.கல்விமணி அவர்கள் முதல்பிரதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் சிறப்புப்பிரதி பெற்றுக்கொண்டார்.
மேலும் டாக்டர் சேதுகுமணன் சார்பில் சோகா இகெதா கல்லூரி பேராசிரியைகள் நூல்களைப்பெற்று சிறப்பித்தனர்
தோழர் இளவேனில் அவர்கள் தொகுப்பு குறித்து கருத்தை வழங்கினார். நடிகர் நாசர் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கலந்துக்கொண்டு கவிஞர் இன்குலாப், தோழர் நல்லக்கண்ணு, தோழர் இளவெனில் இவர்களிடத்தில் உரையாடல் செய்துவிட்டு முக்கியமான வேலையின் காரணமாக சென்றுவிட்டார்.
நிகழ்வில் கவிஞர் இன்குலாப் அவர்களோடு உரையாடலுக்கும் ஒருங்கிணைக்கப்பட்டது
தோழர் அமீர் அப்பாஸ் தொகுத்து வழ்ங்கினார் தோழர் ஷாநவாஸ் நன்றி கூறினார்
நிகழ்வின் இறுதியில் மக்கள் பாவலர் அவர்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.பலரின் கேள்விகளுக்கு பதில் சொன்ன பாவலர் மோடி அலை வீசுவதாக நம்புகிறிர்களா என எழுச்சி தமிழர் கேட்டார் உடனே நம்புகிறவர்கள் மோசம் போவார்கள் என்று பாவலர் பதில் சொன்னார்.எட்டு மணி நேரம் வேலை என்ற நிலை இன்று இல்லையே என்று ஒருவர் கேட்டார் அதற்க்கு (வீஸீயீஷீக்ஷீனீணீtவீஷீஸீ tமீநீலீஸீஷீறீஷீரீஹ்) தகவல் தொழிநுட்ப துறை வேலைகளின் மூலம் உரிமை பறிக்கப்பட்டு உள்ளது நீங்கள் போராடி தான் பெறவேண்டும் என்றார்.
எனக்கு “போராடுங்கள்” என்று சொல்வதை தவிர வேறொன்றும் தெரியவில்லை என்றார்.